இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.  இது தொடர்பில் கடிதம் ஊடாக எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள திலக் சியம்பலாப்பிட்டிய, தான் குறுகிய காலத்திற்கு இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் சமர்ப்பித்ததாகவும், அவரது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Read More

சியாம்பலாண்டுவில் ஒரு புதிய சூரிய மின் நிலையம்

சியாம்பலாண்டுவில் புதிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Read More

கியூபாவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகள்.. உதவும் சீனா, ரஷ்யா..

கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன. இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.

Read More

தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது .

கொழும்பு, இலங்கை – இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தித் தொழில்துறையில் புதியதொரு சாதனையைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணினி உற்பத்தியாளரான EWIS Colombo Ltd நிறுவனம், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளின் முதற்தொகுதியை சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை நிகழ்வானது, சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் வளர்ந்துவரும் சக்தியாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளமை மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் புத்தாக்கம், தரம் மற்றும் மேன்மை…

Read More