கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள்
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியினுள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.