நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனசக்தி பைனான்ஸ் அதன் சமூக அர்ப்பணிப்பை வலியுறுத்தி தனது 44 வருட பூர்த்தியை சமூக நல நடவடிக்கையுடன் கொண்டாடியது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது 44 வருட பூர்த்தியை, கொழும்பு 10, சென். மேரிஸ் முதியோர் இல்லத்தில் “வலிமையை கொண்டாடுதல். அன்பை பகிர்தல்” எனும் அர்த்தமுள்ள சமூக செயற்திட்டத்துடன் கொண்டாடியது. சிரேஷ்ட பிரஜைகள் தமது வாழ்நாளில் வழங்கிய பங்களிப்புகளை கௌரவித்து, அவர்களின் வலிமை, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிறுவனத்தின் ESG (சுற்றுச்சூழல், சமூகம்…

