நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்றுடன் நிறைவு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள்அனைத்தும் இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்தை மீறும் கல்வி ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சை மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடைகின்றது

