கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் கடிதம் ஊடாக எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள திலக் சியம்பலாப்பிட்டிய, தான் குறுகிய காலத்திற்கு இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் சமர்ப்பித்ததாகவும், அவரது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.