நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

இன்று புனித நோன்பு பெருநாள்
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(10) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். …