இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் செலான் வங்கி ரூ.5.49 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) பதிவு செய்துள்ளது
செலான் வங்கி 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்வருமான வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ.8,444 மில்லியனை பதிவு செய்தது. இது 2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்பதிவு செய்யப்பட்ட ரூ.7,331 மில்லியனிலிருந்து 15.18% வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த 6 மாதங்களுக்கு, செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ.5,489 மில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.4,558 மில்லியனுடன் ஒப்பிடும்போது 20.41% வளர்ச்சியாகும். நிதி செயல்திறன் அறிக்கை…