கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார் பிரான்ஸ் கூட்டுப் படைத் தளபதி
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவைச் சந்தித்துள்ளார். இருவருக்கிடையிலான சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கலாக இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.