நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொழில்நுட்பம்நிறைந்தகாப்புறுதிசேவைகளுடன், இலங்கை, கத்தார், ஓமான்மற்றும்ஐக்கியஅரபுஎமிரேட்ஸில்தனதுசெயல்பாடுகளை ஆரம்பிக்கும் Policybazaar
இந்தியாவின் மிகப்பெரிய காப்புறுதித் தளமான Policybazaar.com, இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தனது காப்புறுதி சேவைகளைத் தொடங்கியதாக அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்புறுதி மாதிரியை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய காப்புறுதி தரகராக இது மாறுகிறது. டிஜிட்டல் மையமாகக் கொண்ட Policybazaarஇன் காப்புறுதி சேவைகள், ஒரு தசாப்தத்திற்கும் மேலான சேவை அனுபவம், தரவு பகுப்பாய்வு மற்றும் நடைமுறை அறிவின் மூலம்,…

