இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
தந்தை மகன் இணைந்தே அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச்சுடு
அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின் போது, தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரான நவீத் அக்ரம் (24) குறித்த புகைப்படம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது 50 வயதான தந்தையுடன்(சஜித் அக்ரம்) இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் தந்தை கொல்லப்பட்ட நிலையில் மகனான நவீத் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் தந்தை துப்பாக்கிக்கான அனுமதியை ஏற்கனவே பெற்றிருந்தார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் மும்முரமாக இடம்பெற்று…
