நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப்பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது
இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிகா ஜனதீர ஆகியோர் இணைந்து,…

