நாளைய (01) சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள்…

தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு
நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர்களில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார…