இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இன்று மாசிமக பூரணை தினம்
இன்று (13) மாசிமக பூரணை தினமாகும் புத்தபெருமான் முதன்முதலில் தனது சொந்த ஊரான கிம்புல்வத் புராவிற்கு விஜயம் செய்த நாள் மத்தியில் உள்ள முழு நிலவு நாள் என்று அழைக்கப்படுகிறது. அங்கு, மன்னன் சுத்தோதனன் தலைமையிலான சாக்கியர்களுக்கு அவர் தர்மத்தை உபதேசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன