இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
சர்வதேச நாணய நிதியத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு கலந்துரையாடல்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருக்கு இடையே நேற்று(ஏப்ரல் 7) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

