உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல் களம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் வழக்கம்போல் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்று அதிரடிமுடிவுகள் பல எடுத்துவரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை , நாடு கடத்தப்படும் இந்தியர்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.