இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…

Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை அமைத்த இந்திய ராணுவம்

நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், 60 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் அங்கு அளிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இதுவரை 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Read More

கச்சத்தீவை மீட்கவேண்டும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று…

Read More

முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்ல திட்டம்

2040ம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்லும் “மூன் மிஷன்” திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NGLV என பெயரிடப்பட்டுள்ளபெரிய ராக்கெட்டுகளை வடிவமைத்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

Read More

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ; மூடப்படும் வீதிகள் குறித்து அறிவித்தல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தர உள்ள நிலையில், அவரது விஜயத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க இன்று(ஏப்ரல் 2) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதற்கமைய ஏப்ரல் 4ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்…

Read More

IPL தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Read More

கிராமத்து காவியத்தை திரையில் காட்டிய பாரதிராஜாவின் செல்லப்பைங்கிளி உலகைவிட்டு பிரிந்தது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் தாஜ்மஹால் புகழ் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் உயிரிழந்துள்ளார் . அண்மையில் அவருக்கு இருதய அறுவைசிகிச்சை தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிசமுத்திரம், விருமான், மாநாடு போன்ற திரைப்படங்களில் தனித்துத்தெரியும் கதாப்பாத்திரங்களில் நடித்தவர். அப்பா பாரதிராஜாவைப்போல தனது மகனுக்காக “மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை 2023 இயக்கிய அவர் தொடர்ந்து சொந்தமாக திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிவந்த நிலையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை இடம்பெற்றது. அதில் குணாகி வீடு…

Read More

புதிய உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது.  கடந்த ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.  அத்துடன் நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ஓட்டங்களை விளாசியது.  இது ஐபிஎல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.  மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை…

Read More

தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேசமகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துவோம்” என்ற சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையில், தனது நிறுவனத்தின் பெண் பணியாளர்களை மதித்து அவர்களை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் கொண்டாட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தியது. HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு நாவலையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது….

Read More