ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கைது.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கடந்த 12 மணித்தியாலத்திற்குள் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, துபாயிலிருந்து இன்று திங்கட்கிழமை (வெப்ரவரி 18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த 68,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 340 சிகரட்டு பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Read More

கிரிக்கட்டில் புதிய சர்ச்சை ஆரம்பம்? – இந்தியநாட்டு கொடி இல்லாமல் காட்சி தரும் கராச்சி மைதானம்.

8 அணிகள் மோதும் 9வது ICC Champions கிண்ண கிரிக்கெட் போட்டி வெப்ரவரி 19ஆம்திகதி பிற்பகல் 2.30க்கு கராச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு செம்பியனான பாகிஸ்தானும் நியூசிலாந்துதும் மோதுகின்றன. இந்தமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தான் மோதும் முதல் போட்டி இம்மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டிகள் ஆரம்பமாகும்…

Read More

மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அனுப்பிய கடிதம்.

இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான பின்னணி , ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அந்நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்களுடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதனால் அரசு அந்த ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல்…

Read More

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல் களம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் வழக்கம்போல் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்று அதிரடிமுடிவுகள் பல எடுத்துவரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை , நாடு கடத்தப்படும் இந்தியர்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More