ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கிரிக்கட்டில் புதிய சர்ச்சை ஆரம்பம்? – இந்தியநாட்டு கொடி இல்லாமல் காட்சி தரும் கராச்சி மைதானம்.
8 அணிகள் மோதும் 9வது ICC Champions கிண்ண கிரிக்கெட் போட்டி வெப்ரவரி 19ஆம்திகதி பிற்பகல் 2.30க்கு கராச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு செம்பியனான பாகிஸ்தானும் நியூசிலாந்துதும் மோதுகின்றன. இந்தமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தான் மோதும் முதல் போட்டி இம்மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டிகள் ஆரம்பமாகும்…