தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விநியோகச் சங்கிலி முகாமைத்துவ எதிர்காலத்தை வடிவமைக்க ஒன்றிணைந்த Alumex PLC மற்றும் ISMM
இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC, வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் (Supply Chain Management) விசேடத்துவத்துடனும் நிலைபேறான தன்மையுடனும் முன்னேறுவது தொடர்பான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் Alumex நிறுவனம், Institute of Supply and Materials Management (ISMM) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலம் இது வெளிப்படுகின்றது. இந்த மூலோபாய கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ ஆரம்பம் சமீபத்தில் இடம்பெற்ற ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ…

