இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

IPL 2025 – சன்ரைசஸ் அணியில் மாற்றம்
2025 IPL மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து பிரைடன் கார்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணி வியான் முல்டரை அணியில் சேர்த்துள்ளது. வியான் முல்டர் 128 T20 போட்டிகளில் விளையாடி 2172 ரன்கள் எடுத்துள்ளதுடன் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.