நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

2025 IPL இல் தலைமைத்துவ மாற்றத்தோடு களம் காணும் அணிகள்.
2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல்மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்தபோட்டியில் மொத்தம் 10 அணிகளின் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளில், 9 அணிகள் இதுவரை தங்கள் அணித் தலைவர்களை அறிவித்துள்ளன. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை, பஞ்சாப் கிங்ஸ்…