பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் மகிழுந்தை ஓட்டிச்…

3 வயது சிறுமிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்
இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார். தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு பழமையான கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், “நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய…