இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
இஸ்ரேலில் பரவும் காட்டுத்தீ – அவசர நிலை அறிவிப்பு
இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை. காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது. புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து…

