ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின்புதிய தலைவராக பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவு!

இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில், அதன் புதிய தலைவராக பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக வர்த்தக மாற்றங்கள், ஒழுங்குமுறை சவால்கள் மற்றும் காலநிலை பாதிப்புகள் உள்ளிட்ட சவாலான காலக்கட்டத்தில் JAAF அமைப்பை வழிநடத்திய சைபுதீன் ஜெஃபர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பீலிக்ஸ் பெர்னாண்டோ புதிய தலைவராகப் பதவியேற்கிறார். தனது பதவிக்காலம் குறித்து கருத்துத் தெரிவித்த வெளியேறும் தலைவர் சைபுதீன் ஜெஃபர்ஜி,…

Read More

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர்மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின்…

Read More

“கடுமையானகாலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின்ஆடைத்துறைதொழில்துறைரீதியிலானநிவாரணம்மற்றும்மீட்புபணிகளை ஆரம்பித்துள்ளது”

இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) அறிவித்துள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் பல மாவட்டங்களில் போக்குவரத்துத் தடை குறித்த செய்தி அறிக்கைகள் வந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து இந்தத் துறையின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் என்று JAAF உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களை அடையாளம் காணவும், உடனடித் தேவைகளை மதிப்பிடவும்,…

Read More

அமெரிக்காவின் புதிய தீர்வை வரிஅறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை – ஜூலை 2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும். JAAF அறிக்கையின்படி, வியட்நாம் ஏற்கனவே ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து தற்போது 20% தீர்வை வரிக்கு உட்பட்டுள்ளது. பங்காளதேஷ் 35%…

Read More

2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல் திறன்குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச்சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பு 356.08 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி 5.15% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.1% அதிகரித்துள்ளது, ஆனால் இது பல முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது….

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

இலங்கையின் ஆடைத் தொழில் துறை, தொழிற்பயிற்சி நிறுவனங்கள், சமூக சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு, EFC இன் மாற்றுத்திறனாளி வள மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையங்களைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் அண்மையில் கொழும்பில் உள்ள NH Collection Colombo இல் மாற்றுத்திறனாளிகளுக்களை (PwDs) உள்ளடக்கிய ஆடை உற்பத்தி பாடத்திட்டத்தை அங்கீகரிக்கும் நோக்கில் ஒரு தேசியப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. “உள்ளடக்கிய…

Read More