இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!
பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.