339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், காவல்துறை திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் மூல…

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பூட்டு பலாலி – வசாவிளான் வீதி இன்று முதல் திறப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி – வசாவிளான் வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற இந்த வீதியே இவ்வாறு முழுமையாக இன்று(ஏப்ரல் 10) காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வீதியால் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. இவ்விதியை அதிகாலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குறித்த பாதையை…