நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானால் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோ சிங்கம்
சவாரி செய்யக்கூடிய ரோபோ சிங்கத்தை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா? என்று சவால் விட்டு ரோபோ சிங்கம் ஒன்றை கவாசாகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் ஒசாகா நகரில் கண்காட்சியில் குறிப்பிட்ட ரோபோவை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவரும் வகையில் விளக்கப்படத்தையும் ஒளிபரப்பி வருகிறது. CORLEO என்று அழைக்கப்படும் ரோபோ சிங்கம், அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய தனிப்பட்ட போக்குவரத்து வாகனம் ஆகும். ஒவ்வொரு காலிலும் ரப்பர் குளம்பு பொருத்தப்பட்டுள்ளது. புல்வெளிகள், பாறைப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த…

