65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன. அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு…

