‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசேட சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். இதற்கமையவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடாத்தப்பட்டதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5…

