கோட்டைக்கேணியிருந்து அக்கரைவெளிவரையான பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று (மார்ச் 08) நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்று வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக காணப்படும் இந்த வீதி பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்கள். இந்த கண்காணிப்பில் இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு…

Read More