இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்கிய இருவர் கைது…!
குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், தற்போதும் சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

