யாழ். நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் 2025

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது. சர்வதேச வாகனச் சம்மேளனம் (FIA) மற்றும் ஐக்கிய நாடுகளின் ‘வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த கால நடவடிக்கை’ (Decade of Action for Road Safety) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள்…

Read More

காலி மாநகர சபையில் குழப்பநிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபையின் மேயர் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தை  ஆரம்பிக்க முயன்ற போது அங்கிருந்த காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்  “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.  ஆனாலும் காலி மாநகர சபையின் மேயர் விசேட கூட்டத்தை ஆரம்பித்துள்ள…

Read More

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள்…

Read More

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நிபுணர்கள் இந்தியாவில் சிறப்பு பயிற்சி

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து, சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.. இந்தக் குழுவில், இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இரத்தினம் வெட்டுதல் மற்றும் மேம்படுத்துதல் (cutting & polishing) பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர்…

Read More

ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின்  பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சகல ஊடக நிறுவனங்கள் மற்றும்…

Read More

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில்…

Read More

2026 க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘ A ‘ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் விஜயம் செய்வார்கள். வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ!

IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவு 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த வர்த்தக வளாகத்தில் தீ பரவியுள்ளதாகவும், தீயணைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Read More