பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த அமைச்சின்…

Read More

21வது பேரணிக்கு மஹிந்த வருவாரா? இல்லையா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 21 ஆம் தேதிதிகதி இலங்கை பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற கண்டிக்கு வந்தபோது அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

Read More

மீண்டும் விசாரணைக்கு வரும் முன்னாள் அமைச்சரின் வழக்கு

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஒரு கடுமையான கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்காக திரும்பப் பெற கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களை…

Read More

இலங்கைக்கு வருகிறது -Google Pay

கூகிள் வாலட் (Google Wallet) அறிமுகத்தின் ஒரு பகுதியாக, கூகிள் பே (Google Pay) சேவையை தனது அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, இலங்கையில் கூகிள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் கொடுப்பனவுத் தலைவரான விசா ஆகியவற்றுடன் இணைந்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை Commercial Bank of Ceylon PLC பெற்றுள்ளது. இது இலங்கையின் நிதி நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையாகும், பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது. ​இலங்கைச் சந்தையில் Commercial Bank மட்டுமே…

Read More

சுங்க கிடங்கில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சூட்கேஸ் கைப்பற்றல்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்க கிடங்கு ஒன்றில் ரூபாய் 110 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் கஞ்சா போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத பொருட்கள் மற்றும் பொதிகள் வைத்திருக்க பயன்படுத்தப்படும் களஞ்சியசாலை கிடங்கில் இருந்து இந்த சூட்கேஸ் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டுக்கு வருகை தந்த பயணி ஒருவரால் இந்த சூட்கேஸ் கைவிடப்பட்டதாக விசாரணைகளில்…

Read More

உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில்  ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இதன்படி, 100,000 ஆண்களில்  27 உயிரிழப்புகளும், 100,000 பெண்களில் ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  நாட்டில் மொத்த உயிர்மாய்ப்புகளின்  விகிதம் 100,000 க்கு 15 ஆக பதிவாகியுள்ளன.  இது உலகளவில் சராசரியாக 10.5 ஐ விட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் படி உயிர்மாய்ப்பு விகிதம் வயதுக்கு…

Read More

நானுஓய வரை மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத போக்குவரத்து

மலையக ரயில் பாதையின் இயக்கம் இன்று (19) நானுஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இடல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் இது நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், ரயில் பாதை இன்று (19) இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் தொடர்ந்து நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (19) பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்….

Read More

APEX 2026 விருது வழங்கும் விழாவில் சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள…

Read More

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பயறு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025…

Read More