வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான…

Read More

வானில் லியோனிட்ஸ் விண்கல் பொழியும்

வானில் இன்று திங்கட்கிழமை (17) இரவு முதல் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர். இந்த அறிய காட்சியை வெற்று  கண்ணால் பார்க்க முடியும் எனவும் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை எனவும்  வானியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

Read More

கத்தியால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகாயம்!

களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இயைடில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில்…

Read More

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை  (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு…

Read More

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்து ஆராய்வு

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள…

Read More

யாழ். பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது – நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16)  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , மாணவனின் உடமையில் இருந்து, 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மாணவன் ஊவா மாகாணத்தை சேர்ந்த பெரும்பான்மையின…

Read More

அமெரிக்காவின் பல உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி மற்றும் COFFEE உள்ளிட்ட பல அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரிகள் குறைக்கப்பட்ட உணவுகளில் வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி ஆகியவை உள்ளடங்குகின்றன . வரிகள் நீக்கம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட  வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான்…

Read More

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் தயாரிக்க ஆலோசனை

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின்…

Read More

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வருடாந்த அறிக்கைகள் பரிசீலனை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க  தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு வியாழக்கிழமை (13)  பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த…

Read More