இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நேற்று (வெப்ரவரி 14) நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நவீன் திசாநாயக்க முன்னர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.