மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஹோமாகம புத்தக களஞ்சியசாலையின் விடுதியில் தங்கியிருந்த பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவர் சம்பவத்தன்று இரவு தனது சக பணியாளர்களுடன் இணைந்து விடுதியில் மதுபானம் அருந்திவிட்டு உறங்கியுள்ள நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்காததால் சக பணியாளர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் ஊடாக ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எவ்வாறிருப்பினும் இவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்…

Read More

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி 

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேணும் வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதித்துள்ளது.  சூரை மீன் பிடிக்கும் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கு…

Read More

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி 

இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.   ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் 6 உப திட்டங்களில் ஒன்றான இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.03.04 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.  இத்திட்டத்தின் ஒப்பந்தகாரர்களின் பலவீனமான செயலாற்றுகை காரணமாக குறித்த…

Read More

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மீன் சந்தையில்  செவவாய்கிழமை (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத நிலையில் பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன. களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில் போராட்டம்

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,  தற்போதைய ஆளுநரான நா. வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லை இதனால் அக்கால பகுதியில் வீட்டு திட்டங்களை பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும்…

Read More

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  பேஸ்லைன் வீதியை விரிவாக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக கிருலப்பன சந்தியிலிருந்து கொழும்பு – ஹொறண வீதியின் துட்டகைமுனு வீதி வரையான 0.86 கிலோமீற்றர் தூரத்துக்கு 6 வழிச்சாலைகளை அமைப்பதற்காக 2009.11.11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  ஆயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பாரியளவிலான அபிவிருத்தித் திட்ட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.  இத்திட்டம் எமது நாட்டின்…

Read More

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை  வழங்க அமைச்சரவை அனுமதி 

இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. திங்கட்கிழமை (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.  காப்புறுதித் துறையின் அறிவு விருத்தி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்காக 1982ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டது.  இந்நிறுவனம் காப்புறுதி தொடர்பான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள்,…

Read More

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட நூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில்  அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, தரம் 6 ஆங்கிலப் பாடநூல் குறித்த விசாரணை நிறைவடையும் வரை, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தார். புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6…

Read More

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு – அமைச்சரவை எடுத்த முடிவு

அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’  என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை  வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்…

Read More

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் ; மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், சுயாதீன அலுவலக ஊழியர் சங்கம், சுதந்திர ஊழியர்…

Read More