சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
இலங்கையில் வெற்றிலை ஏற்றுமதி பாதிப்பு
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுகிறது. வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர். எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய…