சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் பாதுகாப்பாக இருங்கள் – வைத்தியர் சமில் விஜேசிங்க
சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள்…