சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
தென்னை உரிமையாளர்களுக்கான புதிய அறிவிப்பு
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்