ஜனாதிபதிக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது 2025 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு வருவாய் துறையின் இலக்கு வருவாயை அடைவதற்குத் தேவையான உத்திகள் குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வருவாய்த் துறைக்கு சேர வேண்டிய முழு வரி வருவாயையும் வசூலிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Read More

மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வெசாக் பண்டிகை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின்…

Read More

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரல்

புறக்கோட்டையில் உள்ள பேங்க்சோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். கனேடிய மற்றும் மெக்சிகன் இறக்குமதிகள் மீதான புதிய 25% வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கிய பின்னர் டிரம்பின் பரஸ்பர வரி வாக்குறுதி வந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக…

Read More

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த தெரிவித்தார். இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத் திட்டமும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலாத் தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் ,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக…

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

மித்தெனிய முக்கொலை.. சிக்கிய துப்பாக்கிதாரி!

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவத்தில் வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8 வயது மகள்,9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர். வீரகெட்டிய மித்திதெனிய பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உந்துருளியில் பயணித்த அடையாளந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்…

Read More

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Read More