இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
குபோட்டாமயம் எனும் எண்ணக்கருவின் புதிய கட்டமாக ஹேலீஸ் அக்ரிகல்ச்சரினால் இலங்கையின் விவசாய நிலங்களுக்கான மூன்று புதிய இயந்திரங்கள் அறிமுகம்
இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர விநியோகஸ்தரான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Hayleys Agriculture Holdings Limited) நிறுவனம், உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வசதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மூன்று அதிநவீன விவசாய இயந்திரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குருணாகல், தம்பொக்கவில் உள்ள அஸ்லிய கோல்டன் கஸாண்ட்ராவில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற்ற இந்த அறிமுக விழாவானது, நாட்டின் விவசாயத் துறையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது. விவசாய நிலங்களை குபோட்டாமயம் செய்யும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சரின்…

