நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

200 வருட வரலாற்றைக்கொண்ட மாத்தளை முத்துமாரி அம்மனுக்கு மாசி மக மஹோற்சவம் ஆரம்பம்.
கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே மிடுக்காய் 108 அடி உயரமான இராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது மாத்தளை முத்துமாரி அம்மா. 200 வருட வரலாறு காணப்படும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மத மஹோற்சவம் இன்று (வெப்ரவரி 18) கொடியேற்றதோடு ஆரம்பமானது. அடுத்து 21நாட்கள் மஹோற்சவ காலை மாலை பூஜைகளோடு இனிதே நடைபெற திருவுளம் கொண்டுள்ளது. இவ்வாலயத்துக்கான பஞ்சரத பவனி மார்ச்மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது.இதன்போது முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர்…