நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

தனது முல்லைத்தீவு கிளையைபுதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE.
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது முல்லைத்தீவில் உள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. இந்த புதிய HNB FINANCE முல்லைத்தீவு கிளை முல்லைத்தீவு பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கிளை திறப்பு நிகழ்வு HNB…