மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் மக்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து…

Read More

இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, மியான்மாரில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read More

மியன்மார் நிலநடுக்கதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு…

Read More