குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “KRISH” பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகைகள் இன்று (வெப்ரவரி 18) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை உயர் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவிற்க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read More

நாமல் ராஜபக்ஷவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை கட்சித்தலைமை காரியாலயத்துக்கு சென்று இன்று (வெப்ரவரி 14) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More