மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி

மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. எனவே, மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்….

Read More

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.  சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read More