நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.
யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

