நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலகுநிதிமுகாமைத்துவத்துக்காக ஒருபுதிய டிஜிட்டல்வங்கித் தளத்தை ஆரம்பித்துள்ள HNB FINANCE
HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும் எளிதாக நிர்வகிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்ட HNBF Online Banking வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவாக மாறிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர் தேவைகளை நன்கு அறிந்து, ஜூன் மாதம் முதல் இந்த சேவையைத் தொடங்க HNB Finance தயாராகி வருகிறது. HNBF Online Banking வசதியைப் பெற, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவற்றிலிருந்து இந்த…

