கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 26 நபர்களும் உள்ளடங்கியுள்ளனர். ஏனையவர்கள் பணச்சலவை சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணிகள், ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நகைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி அண்ணளவாக நான்கு பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.