ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கனடா டொராண்டோவில் நடந்த விமான விபத்து.
கனடா டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி வீழ்ந்த விமானத்தில் இருந்த 80 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மின்னியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்ற போது தீப்பொறிகள் பறக்க ஆரம்பித்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்ப்பு பணிகள் ஆரம்பமாகின. இருப்பினும் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் என்னவென்று புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.